கோவை சிறுமி பாலியல் - கொலை வழக்கில் ஒருவன் கைது!

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 08:47 pm
coimbatore-child-rape-case-convict-arrested-by-police

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவனை கைது செய்து அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை மாவட்டம், துடியலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சதீஸ் மற்றும் வனிதா. இவர்களது மகளான 7 வயது சிறுமி கடந்த 24ம் தேதி காணாமல் போனார். தொடர்ந்து காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில், அவர்களின் தேடுதல் வேட்டையில் 26ம் தேதி, சிறுமி சடலமாக  கண்டெடுக்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. 

இந்த வழக்கு தொடர்பாக, குற்றவாளிகளை தேட காவல்துறை தனிப்படை அமைத்தது. தனிப்படையின் தேடுதல் வேட்டையில் இன்று சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், சிறுமியை வன்கொடுமை செய்ததை சந்தோஷ்குமார் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close