தீபாவளிக்கு மட்டுமில்ல...இதற்கும் ஸ்பெஷல் பஸ் விடுவோம்ல..! அசத்தும் அரசுப் போக்குவரத்துக் கழகம்!

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 12:51 pm
special-buses-from-chennai-for-election

தேர்தலையொட்டி, சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18 -ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கானோர், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக, சென்னையிலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 17 -ஆம் தேதி, சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு மொத்தம் 1,025 சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தீபாவளி, பொங்கல் பண்டிகையொட்டி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், ஜனநாயக திருவிழாவான தேர்தலுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்கவுள்ள அரசின் முடிவுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close