பிஎஸ்எல்வி சி-45 ஏவப்படுவதை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி: இஸ்ரோ தலைவர்

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 05:23 pm
permission-to-the-public-to-view-bslv-c-45-launch-isro-leader

பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் ஏவுவதை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் மூலம் எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்கள் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் இந்த செயற்கைகோளை பார்வையிட பொதுமக்களுக்கு முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சிவன், "ஸ்ரீஹரிகோட்டா வின்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்விசி-45 ஏவப்படுவதை பார்வையிட  முதன்முதலாக 1000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், 4 இஸ்ரோ மையங்களில் 108 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும், மாநிலத்திற்கு 3 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் கூறினார். ‘

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close