துரைமுருகனின் நண்பர் வீட்டிலிருந்து ரூ.11.53 கோடி பறிமுதல்?

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 08:31 am
rs-11-53-crore-seized-from-cement-kudone

திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் வீட்டிலிருந்து ரூ.11.53 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வேலூர் மாவட்டம், பள்ளிக்குப்பத்தில் உள்ள துரைமுருகனின் நண்பரும், திமுக நிர்வாகியுமான சீனிவாசனின் வீட்டில் நேற்று அதிகாலை வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். நள்ளிரவு 2 மணி வரை நீடித்த இச்சோதனையின்போது 11.53 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களுடன் வருமானவரித் துறையினர் சென்னை திரும்பியுள்ளனர்.

முன்னதாக,வருமான வரி சோதனை முழுக்க முழுக்க அரசியல் கணக்கு என்றும், வந்தார்கள், கேட்டார்கள், சென்றார்கள் என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close