ராணுவ வீரர்களை தனிப்பட்ட முறையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது : வைகோ

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 11:12 am
no-one-can-t-own-on-indian-soldiers-vaiko

இந்திய ராணுவ வீரர்களை தனிப்பட்ட முறையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும், அவர்கள் 130 கோடி மக்களுக்கும் தான் சொந்தம் எனவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

திருச்சி மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து நேற்றிபவு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தொகுதி வேட்பாளர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய வைகோ, "கஜா புயலால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது, பிரதமர் மோடி ஆறுதல் கூட தெரிவிக்காமல் வெளிநாடுகளுக்கு சென்றார்.

தமிழகத்தை அழிக்கும் திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசால் எதிர்க்க முடியவில்லை. அதற்கு காரணம், அவருக்கு இருக்கின்ற பயம். இந்திய  ராணுவ வீரர்களை தனிப்பட்ட முறையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர்கள் 130 கோடி மக்களுக்கும்தான் சொந்தம்.

வேலையில்லா திண்டாட்டம், பாதுகாப்பின்மை, இடஒதுக்கீட்டை அழிக்க முயற்சி என எல்லா விஷயத்திலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது எனக் கூறினார். 

திருநாவுக்கரசர் பேசும்போது, "மலைக்கோட்டை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, செங்கோட்டை மூன்றிலும் நம் கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு மக்கள் உங்கள் மனக்கோட்டையில் எங்களுக்கும் இடம் தந்து வாக்களிக்க வேண்டும்" எனக் கேட்டு கொண்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close