இயக்குநர் மகேந்திரன் ஓர் வழிகாட்டி - வைகோ புகழாரம்

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 01:45 pm
director-mahendran-is-a-guide-vaiko-tribute

இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தியில், மகேந்திரனின் குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழ்த் திரைத்துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் மகேந்திரன் என்றும், திரையுலகில் இளம் தலைமுறையினருக்கு மகேந்திரன் வழிகாட்டியாக விளங்கியவர் எனவும் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மகேந்திரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close