அரசியலில் உதயநிதி கெட் அவுட் ஆகாமல் இருந்தால் சரிதான்: பொன்.ராதாகிருஷ்ணன்

  Newstm Desk   | Last Modified : 03 Apr, 2019 12:03 pm
pon-radhakrishnan-speech-against-udhyanidhi

அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள உதயநிதி ஸ்டாலின் கெட் அவுட் ஆகாமல் இருக்க பிரார்த்திக்கிறேன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இன்று கன்னியாகுமரியில் வைத்து செய்தியாளர்களிம் பேசிய கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், "வரும் நாடளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற கடுகளவும் வாய்ப்பில்லை என்பதால் காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. வாக்குகளுக்காக யாரையும், எப்போது வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்ற நிலைக்கு காங்கிரஸ் வந்துள்ளது. 

திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். அவர், அரசியலில் கெட் அவுட் ஆகாமல் இருக்க பிரார்த்திக்கிறேன். தற்போதுள்ள அரசியல்வாதிகள் குறைந்தபட்ச நாகரிகத்தையாவது கடைபிடிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close