யுபிஎஸ்சி வினாத்தாளை தமிழ் மொழியிலும் வெளியிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 03:51 pm
upsc-question-paper-must-be-also-in-tamil-case-filed-against-upsc

யுபிஎஸ்சி வினாத்தாளை தமிழ் மொழியிலும் வெளியிடுவது குறித்து யுபிஎஸ்சி ஆணையத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த தேர்வுத்தாள்கள் இந்தி மறறும் ஆங்கிலத்தில் இருக்கும். 

இந்நிலையில், யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளின் வினாத்தாளை தமிழ்மொழியிலும் வெளியிடக்கோரி மதுரையைச் சேர்ந்த விஜயலக்ஷ்மி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கின் விசாரணை, இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'யுபிஎஸ்சி வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருப்பதால் கிராமப்புறத்தில் உள்ள தமிழ் மொழி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மத்திய அரசின் பல்வேறு முக்கிய பணிகளுக்கு நகர்ப்புற மாணவர்கள் மட்டுமின்றி கிராமப்புற மாணவர்களும் செல்ல வேண்டும். எனவே வினாத்தாள் தமிழ் மொழியிலும் இடம்பெற வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் அலுவல் மொழி பட்டியலில் 8வது இடத்தில் தமிழ் உள்ளது' என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

இதையடுத்து, இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, யுபிஎஸ்சி ஆணையத் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள், வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close