தேர்தல் திருவிழா.. டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் லீவு

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Apr, 2019 12:05 pm
tasmac-shops-will-be-closed-in-tamil-nadu-for-4-days-due-to-parliamentary-elections-and-assembly-elections

மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அதன் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு முடியும் வரை உள்ள 48 மணி நேரங்களுக்கு மதுபான கடைகள் அடைக்கப்பட வேண்டும். அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் மதுக்கடைகள் அடைக்க வேண்டும் என கூறி இருந்தது.

தமிழக அரசு இதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் மிகவும் சுதந்திரமான, நியாயமான, அமைதியான முறையில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடத்த வேண்டும் என்ற வகையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாட்களில் மது பானங்கள் விற்பனை செய்ய தடை விதித்தும், பார்களை மூடவும் அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. 

இந்த உத்தரவுக்கு ஏற்றவகையில் தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளும், அதோடு இணைக்கப்பட்டுள்ள பார்களும் வருகிற 16, 17, 18 ஆகிய நாட்களிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே மாதம் 23-ந்தேதியும் மூடப்படும் என தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close