மதுரை கள்ளழகர் கோயில் திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா இன்று தொடங்கியது

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 02:31 pm
the-celebration-of-the-madurai-kallahalar-temple-festival-today

மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தக்கால் நடும் கொட்டகை முகூர்த்த விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் . 

108 வைணவ தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா மிக முக்கியமானதாகும். அந்த வகையில் கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வர். 

இச்சிறப்பு பெற்ற இவ்விழா வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தக்கால் ஊன்றும் கொட்டகை முகூர்த்தவிழா கள்ளழகர் திருக்கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவிலில் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆயிரம்பொன் சப்பரத்தில் பொருத்தப்படும் யாழி முகத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதற்காக அழகர்கோவிலில் உள்ள நூபுரகங்கையிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்கிட முகூர்த்தக்கால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயில் நுழைவு வாயிலில் நடப்பட்டது. 

கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தகால் நடப்பட்டதை தொடர்ந்து, கள்ளழகர் மதுரை வரும் போது எழுந்தருளும் அனைத்து மண்டகப்படிகளிலும் இன்று முகூர்த்தக்கால்கள் நடப்பட்டன . 

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா வரும் 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது . வரும் 15-ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 17-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்ககல்யாணமும் , சிகர நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் வரும் 18-ம் தேதியும் நடைபெறுகிறது . 

ஒரு புறம் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், மதுரையில் சித்திரை திருவிழாவும் துவங்கியுள்ளதால் நகரமே விழா கோலம் கொண்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close