தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்

  ராஜேஷ்.S   | Last Modified : 06 Apr, 2019 09:24 am
tamil-scholar-silamboli-chellappan-passed-away

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 90. சிலம்பொலி செல்லப்பன் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 24.9.1928-ஆம் ஆண்டு பிறந்த சிலம்பொலி செல்லப்பன் நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தைச் சேர்ந்த ஆவார். 

கணித ஆசிரியராக தனது பணியை தொடங்கிய சிலம்பொலி செல்லப்பன், உலக தமிழராய்ச்சி  நிறுவன இயக்குனர், உலக தமிழ் மாநாட்டு உதவி அலுவலராக இருந்துள்ளார். இவர், சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கியத் தேன் உள்பட பல நூல்களை எழுதியவர். சிலம்பொலியாரின் அணிந்துரைகள் என்ற நூல் தமிழ் வளர்ச்சி துறையின் சிறந்த நூல் என்ற பரிசை பெற்றுள்ளது.  சிலம்பொலி செல்லப்பன் தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருதையும் பெற்றுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close