நாளை மறுநாள் சென்னை வருகிறார் மாயாவதி!

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 07:33 pm
bahujan-samaj-party-mayawati-visits-chennai

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, நாளை மறுநாள் (ஏப்ரல் 10) சென்னை வருகிறார்.

தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வைக்கிறார். மேலும், அவரது தலைமையில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கிறது. 

இந்தக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், எம்.பிக்கள், மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து மாயாவதி, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்ய இருக்கிறார். பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சாரத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close