டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைப்பு ! எந்த தேதியில் எந்த தேர்வு?

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 07:48 am
tnpsc-exams-postponed

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அடுத்த மாதம் 5 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

வருகிற 20-ந்தேதியும், 21ஆம் தேதியும் தேர்வுகள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடைபெறும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், நிர்வாக காரணங்களுக்காக வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் நடைபெறவிருந்த எழுத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர்/இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் எழுத்துத் தேர்வு, மே.11ஆம் தேதி காலை மற்றும் மதியம் நடைபெறும் என்றும், வேதியியலர்/ இளநிலை வேதியியலர் எழுத்துத் தேர்வு, உதவி புவியியலர்/ புவி வேதியியலர் எழுத்து தேர்வு, அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் எழுத்து தேர்வு ஆகியவை மே.5ஆம் தேதி (காலை மற்றும் மதியம்) நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. 

கணக்கு அலுவலர்கள் (பிரிவு-3) பணி இடங்களுக்கும், அரசு குற்றவியல் உதவி வக்கீல்கள் (நிலை-2) முதன்மை எழுத்து தேர்வும் ஏற்கனவே அறிவித்தபடி மே.11 மற்றும் 12ஆம் தேதியும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close