கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: ஜெயக்குமார்

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 11:05 am
jayakumar-press-meet

வருமானவரித்துறை சோதனையில், துரைமுருகன் வீட்டில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து, அவரது மகனும், வேலூர் தொகுதி வேட்பாளருமான கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வீட்டில் இருந்த பணத்தை மறைத்துவிட்டு சோதனைக்கு வாருங்கள் என்று ப.சிதம்பரம் அழைப்பது போல இருக்கிறது அவரது ட்வீட். வீட்டை காலி செய்துவிட்டு, வாருங்கள் என்று கூறுவது போல இருக்கிறது. 

வாக்கு கேட்பதை விட, ஊர் ஊராக பணத்தை எடுத்துக்கொண்டு ஓடுவதுதான் எதிர்க்கட்சிகளின் வேலையாக இருக்கிறது. துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் இருந்து பணம் கைப்பற்றபட்டதன் மூலம் இது உறுதியாகிறது. அதன்படி, வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனதை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என்றார். 

மேலும், "பெரியார் சிலை உடைப்பை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரத்தில் கடவுள் மீதான பற்றை விமர்சிக்கவோ, கொச்சைப்படுத்தவோ கூடாது. எந்த ஒரு மதமும் இங்கு மதிக்கப்படவேண்டும்" என்று கி.வீரமணியின் சர்ச்சை பேச்சு குறித்து பேசினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close