வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை: அய்யாக்கண்ணு

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 04:05 pm
ayyakannu-not-to-be-contested-in-varanasi-against-pm-modi

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக தான் போட்டியிடவில்லை என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். நேற்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உடனான சந்திப்பிற்கு பிறகு, இதனை அவர் அறிவித்துள்ளார். 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2017, 2018ம் ஆண்டுகளில் டெல்லி சென்று போராட்டம் நடத்தினார். ஆனாலும், அவர்களது போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை. 

இதையடுத்து, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக 111 விவசாயிகள் போட்டியிடுவர் என்று அய்யாக்கண்ணு அறிவித்தார். 

இந்த சூழ்நிலையில், நேற்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அய்யாக்கண்ணுவை சந்தித்தார். இதன்பின்னர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, "அமித் ஷா உடனான பேச்சுவார்த்தை எனக்கு மனா நிறைவை தந்தது. விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை பாஜக நிறைவேற்றுவதாக கூறியுள்ளது. எனவே வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக நான் போட்டியிடவில்லை" என்று தெரிவித்தார். 

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close