பாஜகவின் தேர்தல் அறிக்கை 'சூப்பர் ஸ்டார்' - தமிழிசை மகிழ்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 04:05 pm
bjp-manifesto-tamilisai-s-opinion

பாஜகவின் தேர்தல் அறிக்கை 'சூப்பர் ஸ்டார்' போன்று உள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று அந்த தொகுதியின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியான நிலையில், அதுகுறித்து பேசிய அவர், "மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, பாஜக தேர்தல் அறிக்கை 'சூப்பர் ஸ்டார்' போன்று உள்ளது" என்று கூறியுள்ளார்.

மேலும், "எந்த தலைவருடைய சிலை உடைக்கப்பட்டாலும் அது தவறுதான்; யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். 

நீட் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருவதால், அது குறித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெறுவது தவறு. தமிழக மக்களின் எண்ணத்திற்கு ஏற்பவும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணமும் தீர்ப்பு மாற்றி அமைக்கப்படும்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close