குற்றச்சாட்டை நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார்; ஸ்டாலின் தயாரா?- தம்பிதுரை அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 12:32 pm
thambidurai-challenges-stalin

ஸ்டாலின் என் மீது சுமத்திய குற்றச்சாட்டை நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயார், ஸ்டாலின் தயாரா? என திமுக தலைவா  ஸ்டாலினுக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சவால் விடுத்துள்ளார். 

அதிமுக எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அதே சமயத்தில், காங்கிரஸ்- திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளரான ஜோதிமணி போட்டியிடுகிறார். ஜோதிமணியை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தம்பிதுரைக்கு சொந்தமாக 15 கல்லூரிகள் இருப்பதாக குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தம்பிதுரை இன்று பதிலளித்தபோது, "எனக்கு சொந்தமாக 15 கல்லூரிகள் இருப்பதாக ஸ்டாலின் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டு கூறி வருகிறார். என் மீதான குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபித்தால், நான் உடனடியாக பதவி விலகத் தயார். அவர் தயாரா?" என்று சவால் விடுத்துள்ளார். 

மேலும், தொடர்ந்து இவ்வாறு பொய் குற்றச்சாட்டு கூறி வந்தால், திமுக தலைவர் ஸ்டாலின், கரூர் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடருவேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close