பணம் பறிமுதல்: துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது போலீசில் புகார்!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 02:16 pm
ec-officer-case-files-against-kathir-anand

வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது காட்பாடி காவல் நிலையத்தில், தேர்தல் செலவின உதவியாளர் புகார் அளித்துள்ளார். 

திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லூரி, துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூரில் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் ரூ.11.53 கோடியும், துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கதிர் ஆனந்தின் வீட்டில் இருந்து அதிகமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி, தேர்தல் செலவின உதவியாளர் புகார் அளித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close