பாஜக தேர்தல் அறிக்கை: 'நதிகள் இணைப்பு' -க்கு ரஜினிகாந்த் வரவேற்பு!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 03:58 pm
rajinikanth-opinion-about-bjp-manifesto

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளில் ஒன்றான 'நதிகள் இணைப்பு' திட்டத்திற்கு ரஜினிகாந்த் வரவேற்பு அளித்துள்ளார். 

இன்று சென்னை போயஸ் கார்டனில் வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "தர்பார் பட பர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் கமலுக்கு ஆதரவா? என செய்தியாளர்களின் கேள்விக்கு, "கமலுக்கும், எனக்கும் நல்ல நட்பு உள்ளது. அதனை கெடுத்து விடாதீர்கள். என்னுடைய அரசியல் நிலைப்பாடு பற்றி நான் ஏற்கனவே கூறிவிட்டேன். யாருக்கும் ஆதரவு இல்லை. நான் இதை பற்றி இனிமேல் பேச விரும்பவில்லை" என்று ரஜினி பதில் அளித்தார். 

தொடர்ந்து பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து, "அதில், நதிகள் இணைப்பு பற்றி வாக்குறுதி இடம்பெற்றுள்ளது. நதிகளை இணைக்க  ஆணையம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்கள். நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று நான் வெகுநாட்களாக கூறிக் கொண்டு வருகிறேன். மறைந்த பிரதமர் வாஜ்பாயின் கனவும் அது தான். நானும், நதிகளை இணைக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாயிடம் கோரிக்கை வைத்தேன். அந்த திட்டத்திற்கு 'பாகீரத்' என்று பெயரிடும்படியும் கூறினேன்.

அதன்படி, பாஜக கூறியுள்ளபடி, ஆட்சிக்கு வந்தால், முதலாவதாக நதிகளை இணைப்பது தொடர்பாகவும், ஆணையம் அமைக்கவும் கையெழுத்திட வேண்டும். நதிகளை இணைப்பதன் மூலமாக, மக்களின் வறுமை போய்விடும். விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய நீர் கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். 

தேர்தல் நேரம்...சென்சிட்டிவ் ஆன நேரம். அதனால் வேறு எதுவும் நான் பேச விரும்பவில்லை" என்று கூறினார். 

முன்னதாக, நாட்டில் தண்ணீர் பிரச்னையை யார் தீர்க்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று ரஜினிகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close