வேலூரில் பணம் பறிமுதல்: வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 03:09 pm
ec-files-case-against-duraimurugan-son

துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் பணம் பறிமுதல் செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லூரி, துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூரில் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் ரூ.11.53 கோடியும், துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதையடுத்து, வருமான வரித்துறையின் பரிந்துரையின் பேரில், தேர்தல் ஆணையத்தில் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

மேலும், மாஜிஸ்திரேட் உத்தரவுக்கு பின்னர் வழக்குபதிவு செய்யப்படும் என்றும் யார் மீது வழக்குப்பதிவு என்பது பின்னரே தெரிய வரும் என்றும் இதுவரை பணப்பட்டுவாடா தொடர்பாக 128 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close