டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 04:12 pm
tnpsc-government-training-for-examination-you-can-apply-for-tomorrow

டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி, ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழக அரசின் இலவச பயிற்சி பெற விரும்புவர்கள் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று, தமிழக அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் அறிவிப்பில், தமிழக அரசின் இலவச பயிற்சிக்கு நாளை முதல் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் இடஒதுக்கீட்டு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை 6 மாத கால பயிற்சி வழங்கப்படும். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லூரி வளாகத்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச தகுதியாக 10-ஆம் வகுப்பு முடித்திருக்கும்  நபர்களுக்கு இலவசமாக தமிழக அரசு பயிற்சி வழங்குகிறது. தமிழக அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close