தமிழகத்தில் மேலும் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 05:18 pm
tn-byelection-for-4-constituencies

தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி,  திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், வருகிற ஏப்ரல் 22ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 30ம் தேதி வேட்புமனுத்தாக்கல் மீதான பரிசீலனை நடைபெறும். மே 19 அன்று தேர்தல் நடைபெறும்.  மக்களவைத் தேர்தலோடு, மே 23 அன்று இந்த தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், 7வது கட்ட தேர்தல் நடைபெறும் மே 19 அன்று தான், இந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. 

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இரண்டும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி (2ம் கட்டம்) நடைபெறவுள்ளது.

இந்த அறிவிப்பினை அடுத்து, மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுதவிர, மறைந்த கோவாவின் முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் தொகுதியான பனாஜிக்கும், கர்நாடகாவின் குன்ட்கோல் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் மே 19 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close