நீர் மாசுபாடு: தமிழக அரசுக்கு விதித்த ரூ. 100 கோடி அபராதத்திற்கு தடை!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 05:16 pm
madras-hc-interim-ban-for-national-green-tribunal-s-judgement

சென்னையில் நீர் வழித்தடங்களை முறையாக பராமரிக்கத் தவறியதாக கூறி, தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு விதித்த 100 கோடி ரூபாய் அபராதத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'சென்னையில் உள்ள கூவம் ஆறு முழுமையாக சீரமைத்து மீட்டெடுக்கப்படும் என ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கடந்த 2014-15ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அத்திட்டத்திற்கு ரூ.1,934 கோடியே 84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால், இதுவரை அமல்படுத்தப்படவில்லை. எனவே, பொதுப்பணித்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவில், தமிழக பொதுப்பணித்துறைக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும், சென்னை நீர்வழித்தடத்தில் மாசு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி,  நடவடிக்கை எடுக்காததற்கான காரணம் குறித்து பொதுப்பணித்துறை விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் பொதுப்பணித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று மேல்முறையீட்டு மனு விசாரணையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு விதித்த 100 கோடி ரூபாய் அபராதத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயமும், மனுதாரரும் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close