பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 05:50 pm
kerala-nun-rape-case-special-investigation-team-of-kerala-police-files-charge-sheet-against-rape-accused-franco-mullakal

கேரள மாநிலத்தில், கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சிக்கிய பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரியை, ஜலந்தர் பிஷப் பிராங்கோ முலக்கல், பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது. 2014 முதல் 2016 வரை பலமுறை தன்னை பிஷப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த கன்னியாஸ்திரி குற்றம்சாட்டியிருந்தார். 

ஆனால், அதிகார பலம் பெற்ற பிஷப் மீது நடவடிக்கை எடுக்க, காவல்துறை தயங்கி வந்ததாக கூறப்பட்ட நிலையில், போராட்டங்கள் நடைபெற்றன. பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக 4 கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டங்களை நடத்தியதை அடுத்து, அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வைக்கம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு, இந்த வழக்கை விசாரித்து வந்தது.

இந்நிலையில், பிஷப் பிராங்கோ முல்லகல்லுக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கேரள மாநில சிறப்பு விசாரணைக்குழு குற்றப்பத்திரிகையை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close