கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 06:52 pm
special-classes-should-not-be-held-on-summer-vacation-alert-private-schools

கோடை விடுமுறை  நாட்களில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்  நடத்தக்கூடாது என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் தங்களது சொந்த ஊரில் உறவினர்களுடன் பழகி உறவுகளின் அவசியத்தை தெரிந்துகொள்ள விடுமுறை வாய்ப்பாக அமையும்; கோடை காலத்தில் வெப்பம் சார்ந்த நோய்கள் வர வாய்ப்புள்ளதால், மாணவர்களுக்கு கட்டாயம் ஓய்வு அளித்திட வேண்டும் என்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close