இரட்டை இலையை தோற்கடிக்க யாரும் பிறக்கவில்லை: தம்பிதுரை

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 10:08 am
nobody-was-born-to-defeat-the-twin-leaf-thambi-durai

இரட்டை இலையை தோற்கடிக்க உலகத்தில் யாரும் பிறக்கவில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

கரூர் மாவட்டம் காணியாளம்பட்டியில் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக வேட்பாளருமாக தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக கூறும் ஸ்டாலின் அதை நிரூபிக்க தயாரா? என்றும் நிரூபித்தால் அரசியலை விட்டு நான் விலக தயார் எனவும் கூறினார். மேலும் ஸ்டாலின் நிரூபிக்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடர்வேன் என தெரிவித்தார். 

மேலும், 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் எனவும், இரட்டை இலையை தோற்கடிக்க உலகத்தில் யாரும் பிறக்கவில்லை எனவும் அவர் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close