ஓ.பி.எஸ்.க்கு சம்மன் அனுப்பாதது ஏன்? ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பில் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 12:14 pm
why-did-not-send-the-sammon-to-ops

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருப்பது ஏன் என ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிதரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இன்று அப்பல்லோ  மருத்துவர்கள் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அப்பல்லோ நிர்வாகம் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் அப்பல்லோ மருத்துவர்கள் இன்று ஆஜராகவில்லை.

இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகும் படி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு 6 முறை சம்மன் அனுப்பியும், ஆஜராகவில்லை. அப்படியிருக்கும் போது, துணை முதலமைச்சருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்காமல் அப்பல்லோ மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பியது ஏன்  எனவும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close