ஐடி ரெய்டு: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு!

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 06:25 pm
fir-filed-against-dmk-candidate-kadhir-anand

வேலூரில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக. திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது காட்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் செலவின மைய ஒருங்கிணைப்பு அலுவலர் மு.சிலுப்பன் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரி, திமுக பிரமுகர்கள் பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோன், தாமோதரனுக்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில், பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close