தேர்தல் குறித்த விளம்பரப் பலகை வைக்ககோரிய மனு தள்ளுபடி!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 12:25 pm
madras-hc-dismissed-case-against-ec

ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்பதை வலியுறுத்தி, விளம்பரப் பலகை வைக்ககோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், "தேர்தல் ஆணையம், தேர்தல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 100% வாக்குப்பதிவுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறதோ அதுபோன்று, ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்பதையும் வலியுறுத்தி ஆங்காங்கே விளம்பரப்பலகைகள் வைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு மீதான இன்றைய விசாரணையில், தேர்தல் குறித்து அனைத்து விதத்திலும், குறிப்பாக ஓட்டுக்கு பணம் வாங்குவது குறித்து ஏற்கனவே மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. 

இறுதியாக விசாரணை முடிவில், விளம்பரப் பலகை வைக்ககோரிய வழக்கறிஞர் சூர்யபிரகாசம் அளித்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close