தமிழக தேர்தல் டிஜிபியாக பதவியேற்றார் அசுதோஷ் சுக்லா!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 12:36 pm
ashutosh-shukla-dgp-takes-charges-today

மக்களவைத் தேர்தலையடுத்து, தமிழகத்தில் தேர்தலுக்கான, புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள அசுதோஷ் சுக்லா இன்று பதவியேற்றுக்கொண்டார். 

தமிழகத்தில் டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் இருந்து வரும் நிலையில், தற்போது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு,  அசுதோஷ் சுக்லாவை  தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமனம் செய்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இன்று அவர்  பதவியேற்றுக்கொண்டார். சுக்லா, இதற்கு முன்பு சிறைத்துறை டிஜிபியாக பணியாற்றியுள்ளார்.

பதவியேற்ற பின்னர் சுக்லா பேசுகையில், "தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும். அதற்கு காவல்துறை அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றார். 

தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில், அவர் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close