ஆதார் அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம்: சத்யபிரதா சாஹூ

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 03:20 pm
you-can-vote-using-aadhaar-card

ஆதார் அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.  

சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை  5,98,69,758. அதில் 2,95,94,923 ஆண் வாக்காளர்கள் , 3,02,69,45 பெண் வாக்காளர்கள்,   5790 மூன்றாம் பாலினத்தவர்கள். கடந்த 2 மாதங்களில் மட்டும் 14,10,745 புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

வாக்காளர் அடையாள அட்டையை தவிர ஆதார் அட்டை உள்ளிட்ட 11 அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம். வாக்கு சாவடிக்குள் கைப்பேசி எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இடைத்தேர்தலுக்கு 269 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். 1,50,302 மின்னணு வாக்குபதிவு இயந்திரம் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது. 89,160 கட்டுப்பாட்டு இயந்திரமும் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது.

67,720 வாக்குச் சாவடிகள் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட உள்ளது. அதில் 7,780 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 4,08,973 தபால் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 11,853 தேர்தல் பணியாளர்களும் வாக்குகள் அளித்துள்ளனர்.

சிவிஜில் செயலி மூலம் இதுவரை 2085 புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 899 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50 புகார்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 1950 என்ற எண் மூலம் இதுவரை 1,48,788 அழைப்புகள் வந்துள்ளது. அதில் 1,46,001 அழைப்புகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 4185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  93 முதல் தகவல் அறிக்கைகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குச்சாவடியை  கைப்பற்றுவது தொடர்பான பேச்சுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது".

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close