ஏப்.14ம் தேதி கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 04:20 pm
coimbatore-shatabdi-express-train-canceled-on-april-14

அரக்கோணம் - தக்கோலம் இடையிலான பொறியியல் பணிகள் காரணமாக ஏப்.14ம் தேதி சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏப்., 14-ம் தேதி காலை 07.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில் எண் : 12243 (சென்னை சென்ட்ரல் - கோவை) சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும், அன்றைய தினம் பிற்பகல் 03.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில் எண் : 12244 (கோவை - சென்னை) ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. 

மேலும், சென்னையில் இருந்து 14-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் எண் : 22153 சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், 2 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close