மொழி தெரியாமல் காணாமல் போன சகோதரர்; தேடி அலையும் பங்களாதேஷ் இளைஞர்!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 05:27 pm
bangladeshi-man-searching-to-find-his-brother-who-had-missed

மொழி தெரியாமல் காணாமல் போன தனது சகோதரனை, சென்னையில் கடந்த சில மாதங்களாக தேடி வருகிறார் பங்களாதேஷ் இளைஞர். மருத்துவ சிகிச்சைக்காக அவர் தனது சகோதரரை வேலூருக்கு அழைத்து வந்த சமயத்தில் சகோதரர் காணாமல் போயுள்ளார். 

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர் புராதன்ய சந்திர நாத். இவரது சகோதரர் பங்கஜ் சந்திர நாத் பங்களாதேஷில் ஒரு விபத்தில் சிக்கி உள்ளார். இதில், அவரது வலது கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பங்கஜ் சந்திரநாத்துக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, பங்களாதேஷில் உள்ள மருத்துவர்கள், வேலூர் தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

அதன்படி, வேலூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பங்கஜ் சந்திர நாத் திடீரென தங்கியிருந்த அறையில் இருந்து காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  

கடந்த 2 மாதங்களாக எங்குதேடியும் கிடைக்காத நிலையில், வேலூரில் கடைத்தெருவில் உள்ள வணிகர்கள் சிலர், பெண் ஒருவர் பங்கஜ் சந்திரநாத்தை அழைத்துச் சென்றதாக கூறியுள்ளனர். 

மொழி தெரியாமல் தனது சகோதரனை கண்டுபிடிக்க, புராதன்ய சந்திர குமார் தனது உறவினர்கள் உதவியுடன்  சென்னையில் தேடி அலைந்து வருகிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close