பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 4 பேர் மீது குண்டர் சட்டம் உறுதி

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 07:34 pm
pollachi-sexual-case-kundas-on-4-people-confirmed

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை, சென்னையில் உள்ள அறிவுரை கழகம் உறுதி செய்துள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்து வருகிறது. 

இந்த நிலையில், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர்  சென்னையில் உள்ள அறிவுரை கழகத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, கைதான 4 பேரின் குண்டர் சட்டத்தை அறிவுரை கழகம் உறுதி செய்துள்ளது. இந்த தகவலை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close