தாய், மகன் கொலை வழக்கில் இளைஞர் கைது

  ராஜேஷ்.S   | Last Modified : 11 Apr, 2019 10:57 pm
tiruthani-murder-case-jewelry-robbery-with-credit-crunch

திருத்தணி அருகே நகைக்காக தாய், மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவரை காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகேயுள்ள பி.டி.புதூரில் கடந்த ஏப்ரல் 8 -ஆம் தேதி, வீட்டில் இருந்த தாய் வீரலட்சுமி,  அவரது 10 வயது மகன் போத்திராஜ் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, 21 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, பக்கத்து வீட்டு இளைஞர் வெங்கடேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கடன் தொல்லையால் வீரலட்சுமியின் வீட்டில் புகுந்து நகையை கொள்ளையடித்தாக வெங்கடேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close