சாதிக் பாட்ஷாவின் மனைவி குடியரசுத் தலைவருக்கு கடிதம்!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 09:55 pm
sadhik-basaha-wife-letter-to-president

தனது கணவரின் மரணம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சாதிக் பாட்ஷாவின் மனைவி ரேஹாபானு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

 "2 ஜி வழக்கில் எனது  கணவர் அளித்த வாக்குமூலம் குறித்தும், அதில் அவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.ராசா உள்பட யார் யார் பெயரையெல்லாம் குறிப்பிட்டுள்ளார் என்பதை கண்டறியும் பொருட்டும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது " என ரேஹாபானு தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில், முக்கிய சாட்சிகளில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சர்  ஏ.ராசாவின் நெருங்கிய நண்பருமான சாதிக் பாட்ஷா. கடந்த 2011 மார்ச் 16 -ஆம் தேதி, சென்னையில் உள்ள தனது வீ்ட்டில் மர்மமான முறையில் தற்கொலை செய்துக் கொண்டார்.

சமீபத்தில், சென்னை ஓஎம்ஆர் சாலையில் சாதிக் பாட்ஷாவின் மனைவி ரேஹாபானு சென்றுக் கொண்டிருந்த கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close