மறு அறிவிப்பு வரும் வரை ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ரத்து !

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 07:42 am
jet-airways-cancelled-in-chennai

சென்னையில் இருந்து இயக்கப்பட்டு வந்த ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மறுஅறிவிப்பு வரும்வரை ரத்து செய்வதாகவும், இதற்கு நிதி நெருக்கடியே காரணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிதி பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமான சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும் அந்நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதையும், எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. 

இதனையடுத்து சென்னையில் இருந்து இயக்கப்பட்டுவந்த 3 விமானங்களும் மறுஅறிவிப்பு வரும்வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து முன்னதாகவே பயணிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் ஜெட் ஏர்வேஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close