முதல்வராக வேண்டும் என்ற ஸ்டாலின் ஆசை ஒரு போதும் நிறைவேறாது: ஓபிஎஸ்

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 11:10 am
stalin-s-cm-desire-will-never-be-fulfilled-ops

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதல்வராக வேண்டும் என்ற ஆசை ஒரு போதும் நிறைவேறாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

மதுரை வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், 10 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் அரசு வெறும் பொம்மை அரசாக மட்டுமே செயல்பட்டது என கூறினார். மேலும், காங்கிரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் 1.76 லட்சம் கோடி ஊழல் தான் மிஞ்சியது எனவும், சேது சமுத்திரத்திட்டம் என்ற பெயர் 40,000 கோடியை வீணாக செலவு செய்ததாகவும் குற்றம்சாட்டினார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதல்வர் ஆசை ஒரு போதும் நிறைவேறாது எனவும், பெரிய ஆலமரமான அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close