சிலைக்கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்கத் தடையில்லை: உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 11:25 am
pon-manickavel-can-continue-his-job-for-investigating-idol-scam-cases

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது சரிதான் என்றும் கூறியுள்ளது. 

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஐ.ஜி.பொன்.மணிக்கவேல் விசாரித்து வந்தார். அவரது அதிரடி நடவடிக்கைகளால் காணாமல் போன பல சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் சில முக்கிய புள்ளிகள் மாட்டியதையடுத்து, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக, அரசாணை வெளியிடப்பட்டதாக குற்றம்சாட்டியதையடுத்து, தமிழக அரசின் ஆணைக்கு இடைக்காலத்தடை விதித்ததுடன், பொன்.மாணிக்கவேலுக்கு ஒரு வருடன் பணி நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. 

தொடர்ந்து, இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணையில் இருந்த வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் கே.எம்.ஜோசப் அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ததுடன்,  சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது சரிதான் என்று கூறியுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close