திரிபுராவில் மீட்கப்பட்ட சென்னை சிறுமி!

  ராஜேஷ்.S   | Last Modified : 12 Apr, 2019 10:15 pm
chennai-girl-rescued-in-tripura

கடந்த மாதம் சென்னையிலிருந்து வடமாநில இளைஞரால் திரிபுராவிற்கு கடத்தி செல்லப்பட்ட சிறுமி, தமிழக காவல் துறையால் நேற்று பத்திரமாக மீட்டு வரப்பட்டார்.


சென்னை, அமைந்தகரையை சேர்ந்தவர் கவியரசன் (40). ஆட்டோ டிரைவர். இவரது 13 வயது மகள், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 -ஆம் வகுப்பு படிக்கிறார். கடந்த மாதம் 15 -ஆம் தேதி கடைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. 
இதுகுறித்து கவியரசன், எதிர்வீட்டில் குடியிருக்கும் வடமாநிலத்தை சேர்ந்த ஜாகீர் என்பவரே தன் மகளை கடத்தி இருக்க முடியும் என்று அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அண்ணா நகர் காவல் உதவி ஆணையர் குணசேகர் தலைமையில் தனிப்படை அமைத்து, போலீசார் சிறுமியை தேடினர். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஜாகீரின் செல்போன் திரிபுராவில் இருப்பதாக சிக்னல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அமைந்தகரை போலீசார் திரிபுரா போலீசாருடன் தொடர்பு கொண்டு அங்கு சென்று, உத்தேஸ் என்ற கிராமத்திலிருந்த சிறுமியை மீட்டனர். தப்பி செல்ல முயன்ற ஜாகீரையும் உதவி ஆய்வாளர் சிவசங்கரன் விரட்டி பிடித்தார். பின்னர் திரிபுரா போலீசார் ஜாகீரை கைது செய்து அழைத்து சென்றனர்.

இதன் பிறகு, சிறுமியை அமைந்தகரை போலீசார் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்து அவரது தந்தை கவியரசனிடம் ஒப்படைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close