காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது

  ராஜேஷ்.S   | Last Modified : 13 Apr, 2019 09:07 am
postal-polls-for-police-began-late

சென்னை நந்தனம் கலைக் கல்லூரியில் இன்று காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை நந்தனம் கலைக் கல்லூரியில் இன்று காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. தென்சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட காவல்துறையினர் வாக்களித்து வருகின்றனர். தேர்தல் ஊழியர்கள் தாமதமாக வந்ததால் காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு 8 மணிக்கு தொடங்கியது.

இதேபோல், சென்னை பல்லாவரத்தில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதிக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்க தாமதமானதால் காவல்துறையினர் திரும்பிச் சென்றனர்.

மேலும், கடலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் உள்பட 92% பேர் தபால் வாக்குப்பதிவு மூலம் வாக்களித்துள்ளனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close