தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி!

  அனிதா   | Last Modified : 13 Apr, 2019 10:24 am
pm-modi-to-campaign-in-tamil-nadu

தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

மக்களவை தேர்தலையொட்டி, அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக  பிரதமர் மோடி இன்று தமிழகத்தில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்றிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை விமானநிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை  தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இன்று காலை 11 மணியளவில் தேனியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பிரதமர் மோடி, அதனை தொடர்ந்து மதியம் 1 மணியளவில் ராமநாதபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close