தேனி பொதுக்கூட்டத்திற்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி!

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 11:24 am
pm-modi-reached-theni

தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் பொருட்டு, பிரதமர் மோடி இன்று தேனிக்கு வருகை தந்துள்ளார். 

மக்களவை தேர்தலையொட்டி, அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி சார்பிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி, நேற்றிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை விமானநிலையம் வந்தடைந்தார். 

தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

தொடர்ந்து, இன்று காலை 11 மணியளவில் தேனியில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close