தமிழகத்தில் இதுவரை ரூ.129.50 கோடி பறிமுதல்

  ராஜேஷ்.S   | Last Modified : 13 Apr, 2019 02:34 pm
rs-129-50-crore-seized-in-tamil-nadu

தமிழகத்தில் இதுவரை (மார்ச் 12 வரை) ரூ.129.50 கோடி, 991 கிலோ தங்கம், 611 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், 19,655 உரிமம் உள்ள துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.7.81 கோடி மதிப்பிலான வேட்டி, சேலை உள்ளிட்ட ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்ய பிரதா சாஹூ கூறியுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close