'நவராத்திரி உண்ணா நோன்பு' இருந்தும், தொடர் பிரச்சாரங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி!

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 06:23 pm
13-states-23-rallies-pm-modi-s-schedule-while-fasting-during-navratra

வட மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் வசந்த நவராத்திரியை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி, உண்ணா நோன்பு இருந்து வருகிறார். எனினும், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சுற்றி சுழன்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

மக்களவை தேர்தல், ஏப்ரல் 11 முதல்  மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி துவங்கிய மக்களவைத் தேர்தல், 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்றது. தொடர்ந்து ஏப்ரல் 18,23,29, மே 6,12,19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. 

91 தொகுதிகள் தவிர, இதர தொகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி(NDA) சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். 

அவர், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியில் இருந்து இதுவரை 13 மாநிலங்களில் 23 பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். வட மாநிலங்களில் பிரசித்திபெற்ற வசந்த நவராத்ரி இம்மாதம் 6ம் தேதி முதல் நாளை வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த 9 நாட்களும் விரதம் கடைபிடிப்பவர்கள் உணவு உண்ணாமல் உன்ன நோன்பு இருப்பர். அந்த வகையில் பிரதமர் மோடியும் ஒவ்வொரு ஆண்டும் உன்ன நோன்பு இருந்து வருகிறார். 

இந்த சமயத்தில் அவர் உணவு எதுவும் அருந்துவதில்லை. இருந்தபோதிலும் அவர் தனது எந்த ஒரு வேலைகளையும் நிறுத்தி வைக்கவில்லை. இடைவிடாமல் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், தான் விரதம் இருப்பது குறித்தும் அவர் வெளியில் பேசவில்லை. உற்சாகமாக அனைத்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். 

அதேபோன்று வழக்கமாக பிரதமராக இருந்தவர்கள், 2 அல்லது 3 பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு டெல்லி சென்று ஓய்வு எடுத்துவிட்டு, பின்னர் தான் அடுத்தடுத்த பிரச்சார கூட்டங்களில் கலந்துகொள்வர். ஆனால், பிரதமர் மோடியோ,  ஓய்வின்றி தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close