பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 10:31 am
minister-sengottaiyan-press-meet

பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியில், அறிவிக்கப்பட்ட நேரத்தில் வெளியாகும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே இன்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி வெளியாகும். அதாவது, தமிழக பள்ளிக்கல்வித்துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில், அறிவிக்கப்பட்ட நேரத்தில் வெளியாகும். இந்த வருடம் 8, 10,12ம் வகுப்புகளுக்கு புதிய புத்தங்கள் வழங்கப்படவுள்ளன. அதன்படி, புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close