தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை : திமுக குற்றச்சாட்டு !

  முத்துமாரி   | Last Modified : 14 Apr, 2019 11:01 am
rs-bharathi-complaint-about-election-commission

அதிமுக பணப்பட்டுவாடா செய்வதற்கு காவல்துறையினர் துணைபோவதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 11 -ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில், மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், தமிழகம் முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சோதனையில் இதுவரை கோடிக்கணக்கில் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், "அதிமுக பல்வேறு பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும், அதற்கு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பணப்பட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை" என்றும் அவர் கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close