கொளுத்தும் வெயிலைக் காட்டிலும் இது மோசமான ஆட்சி: ஸ்டாலின் கடும் தாக்கு!

  முத்துமாரி   | Last Modified : 14 Apr, 2019 11:30 am
stalin-election-campaign-at-vellore

கொளுத்தும் வெயிலைக் காட்டிலும் மத்தியிலும் மாநிலத்திலும் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் இருபெரும் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டும் போட்டிபோட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்தும், சுற்றுப்பகுதிகளில் உள்ள சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

அப்போது பிரச்சாரத்தில் பேசிய அவர், "தற்போது கோடைக்காலத்தை முன்னிட்டு, சென்னை உள்படதமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயில் கொளுத்துகிறது. ஆனால், அடிக்கும் வெயிலைக் காட்டிலும் மாநிலத்திலும், மத்தியிலும் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மோசமான ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். தமிழகத்தில் வருகிற 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக ஜெயித்து விட்டால் 117 சட்டமன்ற தொகுதிகளை பெற்று திமுக ஆட்சியை பிடித்து விடும்" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close