அதிமுக ஒன்றும் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரவில்லை : அமைச்சர் ஆவேசம் !

  முத்துமாரி   | Last Modified : 14 Apr, 2019 11:49 am
minister-jayakumar-press-meet

அதிமுக ஒன்றும் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரவில்லை; பணம் கொடுத்து ஓட்டு வாங்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அதிமுக பணப்பட்டுவாடா செய்வதற்கு காவல்துறையினர் துணைபோவதாகவும்,  தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். 

இந்நிலையில் இன்று, சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "நாங்கள் ஒன்றும் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரவில்லை. எனவே, பணம் தந்து தேர்தலில் வெற்றிபெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. முறையான தகவல்கள் அடிப்படையில் தான், துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இறுதியில் தகவலும் உண்மையாகியுள்ளது. அவர்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து தான் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. தாங்கள் பிடிபட்டவுடன் அதிமுக மீது குற்றம்சாட்டி திசைதிருப்ப பார்க்கிறார்கள்" எனக் கூறினார்.. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close