இன்று இரவு முதல் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருகிறது!

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 01:41 pm
fishing-boom-period-starts-from-tomorrow

மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால், இன்று இரவு முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

வழக்கமாக மீன்களின் இனப்பெருக்க காலத்தின்போது, மீனவர்கள் யாரும் கடலில் மீன் பிடிக்க செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மீன்களின் இனப்பெருக்க காலம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என்பதால் அந்த சமயங்களில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படும். 

அந்த வகையில், இந்தாண்டு மீன்பிடி தடை காலம் இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று நள்ளிரவு (ஏப்ரல் 15ம் தேதி) முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இந்த காலத்தில், மீன்களின் வரத்து மிகவும் குறைவாகவே காணப்படும். மீன் வியாபாரிகளுக்கு இது கஷ்ட காலமாகவே பார்க்கப்படுகிறது. மேலும், மீன்களின் விலையும் அதிகமாகவே காணப்படும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close